பால் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது
பால் வியாபாரியிடம் கத்தியை காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
கரூர்,
கரூர் வெங்கமேடு புது குளத்துப்பாளையம் ராதா தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 37). பால் வியாபாரியான இவர் அவ் வழியாக சென்று கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த தினேஷ் (22) என்பவர் மது போதையில் ரமேசை கத்தியை காட்டி மிரட்டி தகாத வார்த்தைகளால் திட்டியதாக தெரிகிறது.
இதையடுத்து வெங்கமேடு போலீஸ் நிலையத்தில் ரமேஷ் கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கனகராஜ் வழக்குப்பதிவு செய்து தினேஷை கைது செய்தார்.