நுரையாக பொங்கிய கடல்நீர்

மண்டபம் கடற்கரை பகுதியில் கடல்நீர் நுரையாக பொங்கியது.

Update: 2021-10-16 18:15 GMT
பனைக்குளம், 

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் கடந்த சில நாட்களாகவே பூங்கோறை என்று சொல்லக்கூடிய பச்சை பாசி ஒன்று கடலில் படர்ந்து வருகின்றது. அதிலும் குறிப்பாக மண்டபம் முதல் மரைக்காயர்பட்டினம், புதுமடம் வரையிலான கடல் பகுதியில் பச்சைப்பாசிகள் ஆழ்கடல் பகுதியில் அதிக அளவில் படர்ந்துள்ளதாக கூறப்படுகின்றது.இந்த நிலையில் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் நேற்று காலை முதலே வழக்கத்திற்கு மாறாக பலத்த சூறாவளி காற்று வீசி வருவதுடன் கடல் சீற்றமாக காணப்பட்டு வருகின்றது. ஆழ்கடல் பகுதியில் படர்ந்திருந்த இந்த கடல் பாசி ஆனது நேற்று காற்று மற்றும் கடல் அலையின் வேகத்தால் மண்டபம் தெற்கு கடற்கரை பகுதி முழுவதும் பாசிகள் அழிந்த நிலையில் வெள்ளை நிறத்தில் நுரையாக படர்ந்து கடற்கரை பகுதி முழுவதும் பரவிக் கிடந்தன. அதுபோல் பாம்பன் வடக்கு மற்றும் தெற்கு இரண்டு கடல் பகுதியிலும் தொடர்ந்து கடல்நீர் பச்சைப் பாசிகள் படர்ந்து நிறம் மாறிய நிலையில் தான் காணப்பட்டன.

மேலும் செய்திகள்