இறந்த மகளின் உடலை போலீசாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோர்

பரமக்குடி அருகே இறந்த மகளின் உடலை போலீசாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

Update: 2021-10-16 18:07 GMT
பரமக்குடி,

பரமக்குடி அருகே இறந்த மகளின் உடலை போலீசாருக்கு தெரியாமல் தகனம் செய்த பெற்றோர் மீது போலீசார் வழக்குபதிவு செய்து உள்ளனர்.

பெண் தற்கொலை

பரமக்குடி அருகே உள்ள நண்டுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் தென்னரசு. இவரது மகள் கவுசல்யா (வயது 23). இவருக்கும் பரமக்குடி அருகே உள்ள செவ்வூர் கிராமத்தை சேர்ந்த கனகராஜ் என்பவருக்கும் 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து உள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். 
இந்நிலையில் கவுசல்யா தனது தந்ைத வீட்டில் இருந்துள்ளார். கடந்த சில தினங்களாகவே கவுசல்யா மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவர் தற்கொலை செய்து கொண்டாராம். உடனே அவரது பெற்றோர் கவுசல்யா இறந்த விவரத்தை போலீசாருக்கும் அரசு அதிகாரிகளுக்கும் தெரியப்படுத்தாமல் அவரது உடலை தகனம் செய்து விட்டனர்.

2 பேர் மீது வழக்கு

இது குறித்து அண்டக்குடி குரூப் கிராம நிர்வாக அலுவலர் ஹேமா (36) பெண்ணின் உடலை எரித்து அடையாளத்தை மறைத்ததாக எமனேசுவரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளார்.அந்த புகாரின் அடிப்படையில் எமனேசுவரம் போலீசார் இறந்த கவுசல்யாவின் தந்தை தென்னரசு, தாயார் அமிர்தவள்ளி ஆகிய 2 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்