ஒரே ஆண்டில் 2-வது முறையாக கொளத்தூர் ஏரி நிரம்பியது
ஒரே ஆண்டில் 2-வது முறையாக கொளத்தூர் ஏரி நிரம்பியது.
கண்ணமங்கலம்
திருவண்ணாமலை மாவட்டம் கண்ணமங்கலம் அருகே உள்ள கொளத்தூர் ஏரி, ஒரே ஆண்டில் 2-வது முறையாக நிரம்பி வழிகிறது.
இதன் காரணமாக ஏரியில் மீன் பிடிக்கும் குத்தகைதாரர்கள் மீன்கள் உபரிநீர் வழியே செல்லாதவாறு ஒரு மீட்டர் உயரத்திற்கு மீன் வலை அமைத்துள்ளனர்.
மேலும் உபரிநீர் வழிந்தோடும் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் குளித்து மகிழ்ந்தனர்.