தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டி

Update: 2021-10-16 17:16 GMT


வீணாகும் குடிநீர்

  பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் இருக்கும் பேக்கரி அருகில் குடிதண்ணீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாகிறது. இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே அதிகாரி கள் உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
  கே.செல்வம், சூளேஸ்வரன்பட்டி.

நடைபாதையில் ஆக்கிரமிப்பு

  குன்னூர் அருகே உள்ள அரவங்காடு பஸ் நிறுத்தம் அருகில் நடை பாதையில் விளம்பர பதாகைகள் ஆக்கிரமித்து உள்ளன. இதனால் அந்த வழியாக நடந்து செல்லும் பொதுமக்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
  கோபால், அரவங்காடு.

சுகாதார சீர்கேடு 

  கோவை தடாகம் ரோடு வாழைக்காய் மண்டி பின்புறம் பொது சுகாதார கழிவறை உள்ளது. அதன் அருகே கழிவு நீர் வெளியேறும் பகுதி உடைந்து காணப்படுகிறது. இதனால் கழிவறையில் இருந்து கழிவுகள் வெளியேறுவதால் அந்த வழியே செல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே அதை சரிசெய்ய வேண்டும். 
  சோமசுந்தரம், காந்தி பார்க்.

பராமரிப்பு இல்லாத கழிவுநீர் கால்வாய்

  கோவை கோணவாய்க்கால்பாளயம் அற்புதம் நகர் கழிவுநீர் கால்வாய் பல ஆண்டுகளாக பராமரிப்பு மற்றும் சுத்தம் செய்யவில்லை. இதன் காரண மாக கழிவுநீர் ஊருக்குள் புகுந்து சுகாதார சீர்கேடு உருவாகும் சூழ்நிலை ஏற்ப்பட்டுள்ளது. எனவே கழிவுநீர் கால்வாயை பராமரிக்க வேண்டும்.
  கி.இளங்கோவன், அற்புதம்நகர்.

உழவர் சந்தை வேண்டும்

  கோவை மாநகரில் கோவைப்புதூர் முக்கிய பகுதியாக உள்ளது. இதை சுற்றி பி.கே.புதூர், சுண்டக்காமுத்தூர், குளத்துப்பாளையம் உள்ளிட்ட விவசாய பகுதிகள் உள்ளன. இங்கு விளைவிக்கப்படும் காய்கறிகளை விவசாயிகள் விற்பனை செய்ய ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தைக்கு செல்ல வேண்டும். எனவே கோவைப்புதூரில் புதிய உழவர் சந்தை அமைக்க வேண்டும்.
  சுரேஷ், கோவைப்புதூர்.

ஆபத்தான மரம்

  கோவை நேதாஜி ரோட்டில் பழமையான மரம் ஒன்று சாய்ந்த நிலையில் எந்த நேரத்திலும் கீழே விழக்கூடிய நிலையில் இருக்கிறது. இதனால் விபத்து ஏற்படும் ஆபத்து நிலவி வருவதால், அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் பயத்துடன் செல்லக்கூடிய நிலை நீடித்து வருகிறது. எனவே ஆபத்தான அந்த மரத்தை அகற்ற வேண்டும்.
  மணிகண்டன், கோவை.

பராமரிப்பு இல்லாத கழிப்பிடம்

  குன்னூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுகழிப்பிடம் உள்ளது. அது போதிய பராமரிப்பு இல்லாததால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் அங்கு புதர்செடிகள் அடர்ந்து வளர்ந்து உள்ளது. எனவே பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் கழிப்பிடத்தை சுத்தம் செய்து முறையாக பராமரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். கிருஷ்ணகுமார், குன்னூர்.

ஆபத்தை ஏற்படுத்தும் குழி 

  கோத்தகிரி ராம்சந்த் சதுக்கத்தில் இருந்து மிஷன் காம்பவுண்ட் செல்லும் முக்கிய சாலையோரத்தில் குடிநீர் குழாய் பராமரிப்பு பணிக்காக கடந்த வாரம் குழி தோண்டப்பட்டது. அந்த குழி இன்னும் மூடப்படாமல் உள்ளதால் அந்த வழியாக செல்பவர்கள் பெரிதும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே ஆபத்தான நிலையில் உள்ள குழியை மூட வேண்டும்.
  மணிகண்டன், கோத்தகிரி.

குண்டும் குழியுமான சாலை

  பொள்ளாச்சி மார்க்கெட் ரோடு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் சாலை குண்டும் குழியுமாக காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து மார்க்கெட் ரோட்டில் சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும்.
  கணேசன், பொள்ளாச்சி

கழிவுநீர் தேக்கம்

  பொள்ளாச்சி நகரில் சாலை விரிவாக்கப் பணிகள் நடந்து வருகிறது. இதன் காரணமாக சாக்கடை கால்வாய் கட்டும் பணிகள் பாதியில் நிற்பதால் கழிவுநீர் தேங்கி கடும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. எனவே கழிவுநீர் தேங்காமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
  சரவணன், மகாலிங்கபுரம்.

தெருவிளக்குகள் ஒளிருமா?

  கோவை ஒண்டிப்புதூர் காந்திநகர் நெசவாளர் காலனியில் தெருவிளக்குகள் அமைக்கப்பட்டு உள்ளன. அதில் பல ஒளிராமல் இருக்கிறது. இதன் காரணமாக இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து இருப்பதால் இந்த வழியாக நடந்து செல்பவர்கள் அவதியடைந்து வருகிறார்கள். எனவே அதிகாரிகள் பழுதான தெருவிளக்குகளை சரிசெய்ய வேண்டும்.
  திருநாவுக்கரசு, ஒண்டிப்புதூர்.

தேங்கும் கழிவுநீர்

  கோவை சத்தி ரோடு டெக்ஸ்டூல் பாலத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள சாக்கடை கால்வாயில் பிளாஸ்டிக் கழிவுகள், கட்டிட கழிவுகள் அதிகளவில் கொட்டப்படுகிறது. இதனால் அங்கு கழிவுநீர் செல்ல வழியில்லாததால் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கடுமையான துர்நாற்றம் வீசுவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே அந்த கழிவுகளை அகற்ற வேண்டும்.
  துரைசாமி, கணபதி புதூர். 

குவிந்து கிடக்கும் குப்பைகள்

  கோவையை அடுத்த கீரணத்தம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள 1,200 வீடுகளில் சேகரமாகும் குப்பைகள் கடந்த 5 மாதங்களாக அகற்றப்படாமல் அங்கு குவிந்து கிடக்கின்றன. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. எனவே இங்கு குவிந்து கிடக்கும் குப்பைகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
  இளங்கோவன், கீரணத்தம்.

மேலும் செய்திகள்