படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணைய தளம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம் கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவிப்பு

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இணைய தளம் மூலம் தனியார் துறையில் வேலைவாய்ப்பு பெறலாம் என்று மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் அறிவித்துள்ளார்.

Update: 2021-10-16 17:08 GMT
கடலூர், 

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் கீழ் செயல்படும் அனைத்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களால் சிறு மற்றும் பெரிய அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்கள் நேரடியாக நடத்தப்பட்டு தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்புகள் வழுங்கப்பட்டு வந்தது.

 தற்போது கொரோனா பெருந்தொற்று காரணமாக தமிழகத்தில் உள்ள படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர் களையும் வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்களையும் இணையம் வழியாக இணைத்து வேலை வாய்ப்புகளை பெற்றுத் தரும் நோக்கில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையின் வேலைவாய்ப்பு பிரிவால் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட “தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையம்” (https//www.tnprivatejobs.tn.gov.in) தமிழக அரசால் தொடங்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு

ஆகவே கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த இணைய தளத்தை (https//www.tnprivatejobs.tn.gov.in) பயன்படுத்தி தங்களின் கல்வித் தகுதிகேற்ப பணிவாய்ப்பை தனியார் துறையில் பெற்று கொள்வதற்கும், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேலை அளிக்கும் தனியார்துறை நிறுவனங்கள் தங்க ளிடம் உள்ள காலிப்பணியிடங்களின் விவரத்தினை மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து தகுதிவாய்ந்த வேலைநாடுநார்களை தேர்ந்தெடுக்க வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சிதுறையால் வழிவகை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு தனியார்துறை வேலை இணையதளத்தில் (https//www.tnprivatejobs. tn.gov.in) தங்களது விவரங்களை பதிவு செய்ய கட்டணம் ஏதும் செலுத்த தேவையில்லை.

 முற்றிலும் இது ஒரு இலவச சேவையாகும். இச்சேவையினை கடலூர் மாவட்டத்தில் உள்ள படித்த தனியார் துறையில் வேலைதேடும் இளைஞர்கள் மற்றும் வேலையளிக்கும் தனியார் துறை நிறுவனங்கள், நேரடியாக இணையதளம் மூலமாகவோ அல்லது கடலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தினை நேரடியாக அணுகி பதிவு செய்து தனியார் துறை வேலைவாய்ப்பை பெற்று பயன்பெற வேண்டும்.

 மேற்கண்ட தகவலை கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்