திருவாரூர் பகுதி கோவில்களில் திரளான பக்தர்கள் தரிசனம்

வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்

Update: 2021-10-16 17:07 GMT
திருவாரூர்:
வார இறுதி நாட்களில் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டதால் திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 
தரிசனம் செய்ய அனுமதி
கொரோனா 3-வது அலை பரவலை தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக அனைத்து வழிபாட்டு தலங்களிலும் வாரத்தின் இறுதி 3 நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களும் பக்தர்கள் வழிபாடு நடத்த தடை விதிக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து வாரத்தின் கடைசி 3 நாட்கள் தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என பக்தர்கள் மற்றும் அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இந்த நிலையில் வாரத்தின் இறுதி 3 நாட்கள் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவில் திறப்பு 
இதையடுத்து தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் நேற்றுமுன்தினம் முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டு உள்ளது. அதன்படி திருவாரூர் தியாகராஜர் கோவில் திறக்கப்பட்டது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். நேற்று விடுமுறை என்பதால் வெளியூர் பக்தர்கள் அதிகமாக வந்து தரிசனம் செய்தனர். இதேபோல் திருவாரூர் பகுதிகளில் உள்ள கோவில்களில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்கவேண்டும்.  தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும் போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் கவிதா தலைமையில் கோவில் பணியாளர்கள் செய்திருந்

மேலும் செய்திகள்