மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்பு

குடியாத்தம் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்படடார்.

Update: 2021-10-16 14:05 GMT
குடியாத்தம்
குடியாத்தம் அருகே மாயமான மாணவன் கிணற்றில் பிணமாக மீட்கப்படடார்.
குடியாத்தத்தை அடுத்த பரசுராமன்பட்டி காவாக்கரை பகுதியைச் சேர்ந்தவர் நடராஜ். கூலித்தொழிலாளி. இவரது மகன் ஜீவா குடியாத்தம் ெரயில் நிலையம் அருகே உள்ள அரசினர் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார்.

மாணவன் ஜீவாவின் பாட்டி அதே கிராமத்தில் உள்ள ஒரு தென்னந்தோப்பில் காவலாளியாக உள்ளார்.
கடந்த 14-ந்தேதி வியாழக்கிழமை ஜீவா தனது பாட்டி வேலைபார்க்கும் தென்னந்தோப்பிலி உள்ள கிணற்றில் நண்பர்களுடன் குளித்து விட்டு வீட்டிற்கு செல்வதாக கூறி உள்ளார். ஆனால் அவர் வீடு திரும்பவில்லை.
பெற்றோர் ஜீவாவை பல இடங்களில் தேடிய நிலையில் தென்னந்தோப்பில் இருந்த கிணற்றின் அருகே அவரது ஆடைகள் இருந்தன. இது குறித்து வெள்ளிக்கிழமை மாலை குடியாத்தம் டவுன் போலீசில் அவர்கள் புகார் அளித்தனர்.  அதன் பேரில் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து காணாமல் போன மாணவன் ஜீவா குறித்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலையில் அதே கிணற்றில் ஜீவா பிணமாக கிடந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்து சென்ற போலீசார் இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மாணவன் ஜீவாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
இது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்