தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ராணுவ வீரர் பலி

தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ராணுவ வீரர் பலியானார்.

Update: 2021-10-16 05:39 GMT
நல்லம்பள்ளி:
தொப்பூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி ராணுவ வீரர் பலியானார்.
ராணுவ வீரர்
திருப்பூர் மாவட்டம் வி.ஆர்.கே. நகரை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். இவருடைய மகன் பிரபுதேவன் (வயது27). இவர் ஜம்மு காஷ்மீரில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். விடுமுறைக்காக இவர் சொந்த ஊருக்கு வந்து இருந்தார். விடுமுறை முடிந்து மீண்டும் ஜம்மு காஷ்மீர் செல்வதற்காக திருப்பூரில் இருந்து பெங்களூருவுக்கு மோட்டார் சைக்கிள் மூலம் கடந்த 13-ந் தேதி இரவு புறப்பட்டு வந்தார். 
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் குறிஞ்சிநகர் சுங்கச்சாவடி அருகே பின்னால் கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபுதேவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
போலீசார் விசாரணை
விபத்து குறித்து தொப்பூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் விரைந்து சென்று ராணுவ வீரரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்