புதுவையில் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகள் 31-ந்தேதி வரை நீட்டிப்பு
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி, அக்.
கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கட்டுப்பாடுகள் நீட்டிப்பு
புதுவையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது இந்த கட்டுப்பாடுகள் வருகிற 31-ந்தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளன. இதன்படி இரவு நேர ஊரடங்கு இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணிவரை அமலில் இருக்கும்.
கடற்கரை சாலை, பூங்காக்கள் ஆகியன இரவு நேர ஊரடங்கு தவிர மற்ற நேரங்களில் திறந்திருக்கலாம். இங்கு நடைபயிற்சி மேற்கொள்பவர்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும். அனைத்து வழிபாட்டு தலங்களும் இரவு 10 மணி வரை திறந்திருக்கலாம்.
தடுப்பூசி
வழிபாட்டு தலங்களில் நடைபெறும் திருமணங்களில் 25 பேர் வரை அனுமதிக்கலாம். மற்ற திருமணங்களில் 100 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம். இறுதி ஊர்வலங்களில் 20 பேருக்கு மிகாமல் கலந்துகொள்ளலாம்.
வணிக நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தி இருப்பதை உறுதி செய்ய மாவட்ட நிர்வாகிகள் மேற்பார்வையிட வேண்டும். விதிகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதற்கான உத்தரவினை அரசு செயலாளர் அசோக்குமார் பிறப்பித்துள்ளார்.