டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தற்கொலை
மதுரையில் டாஸ்மாக் கடை மேற்பார்வையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மதுரை,
மதுரை மீனாம்பாள்புரம் சத்தியமூர்த்தி மெயின்ரோட்டை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 51). இவர் பை-பாஸ் ரோட்டில் உள்ள டாஸ்மாக் கடையில் மேற்பார்வையாளராக வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக மனஅழுத்தத்துடன் இருந்துள்ளார். இந்த நிலையில் வீட்டில் திடீரென்று பாண்டியராஜன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து செல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.