திருக்கோவிலூர் அருகே பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை

திருக்கோவிலூர் அருகே பூச்சிமருந்து குடித்து விவசாயி தற்கொலை

Update: 2021-10-15 18:01 GMT
திருக்கோவிலூர்

திருக்கோவிலூர் அருகே உள்ள கீழதாழனூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (வயது 50). விவசாயியான இவர் சம்பவத்தன்று அவரது வீட்டில் நெற் பயிருக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்து மயங்கி விழுந்தார். உடனே ஏழுமலையை அவரது குடும்பத்தினர் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து ஏழுமலை மகன் எழிலரசன் கொடுத்த புகாரின் பேரில் திருக்கோவிலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன் வழக்கு பதிவு செய்து ஏழுமலையின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்