லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனை

Update: 2021-10-15 17:33 GMT
கோவை

கோவையில் கைத்தறி உதவி இயக்குனர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதில் கணக்கில் வராத ரூ.1¾ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

கோவை சாய்பாபா காலனி பாரதி பார்க்கில் கைத்தறி மற்றும் துணி நூல் உதவி இயக்குனர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 13-ந் தேதி இரவு லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இந்த சோதனையானது லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு திவ்யா தலைமையில் நடந்தது. சோதனையின் போது யாரையும் உள்ளேயும், வெளியேயும் செல்ல அனுமதிக்கவில்லை. அங்கிருந்த மேஜை, டிராயர்கள் உள்ளிட்ட இடங்களில் சோதனை செய்தனர்.

ரூ.1¾ லட்சம் பறிமுதல்

மேலும் ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது உதவி இயக்குனர் சூர்யாவிடம் கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 3 ஆயிரமும், கூட்டுறவு சங்க கிளார்க் லியோ என்பவரிடம் ரூ.80 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 83 ஆயிரம் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தொடர்பாக உதவி இயக்குனர் மற்றும் கிளார்க்கிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. முடிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்து உள்ளனர்.

மேலும் செய்திகள்