குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி கேரள லாரி டிரைவர் பலி
குடியாத்தம் அருகே மின்சாரம் தாக்கி கேரள லாரி டிரைவர் பலி
குடியாத்தம்
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் முகமது ஷெரீப் (வயது 30). இவர் ஆந்திர மாநிலத்தில் இருந்து இறைச்சிக்காக மாடுகளை லாரியில் ஏற்றிக்கொண்டு குடியாத்தம் வழியாக சென்றுகொண்டிருந்தார். குடியாத்தம் அடுத்த ஆர்.கொல்லப்பல்லி கிராமம் அருகே லாரியை நிறுத்திவிட்டு லாரியில் இருந்து இறங்கி உள்ளார். அப்போது மழை பெய்து தரை ஈரமாக இருந்துள்ளது. மேலும் லாரியின் மேல்பகுதி மின்கம்பியில் உரசி உள்ளது. இதனால் ஈரமான தரையில் கால் வைத்த லாரி டிரைவர் முகமது ஷெரீப்பை மின்சாரம் தாக்கியது.
அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு உடனடியாக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் வழியிலேயே பரிதாபமாக இறந்துவிட்டார். இந்த சம்பவம் தொடர்பாக குடியாத்தம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் கணபதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.