திண்டிவனம்,
திண்டிவனம் நத்தமேடு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் இளவரசு மகன் ஏழுமலை (வயது 33). கொத்தனார். நேற்று முன்தினம் ஆயுதபூஜையையொட்டி வீட்டின் அருகே இருந்த மா மரத்தில் ஏறி மாஇலைகளை பறித்தார்.
அப்போது மரத்தின் மேல்பகுதியில் இருந்த உயர் அழுத்த மின்கம்பி உரசியதால், ஏழுமலை் மீது மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி வீசப்பட்டு, கீழே விழுந்த அவரை, உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.அங்கிருந்த டாக்டர்கள் அவரை பரிசோதனை செய்த போது, அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து திண்டிவனம் போலீசார் வழக்குப் பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.