ஊட்டி
5 நாள் சுற்றுப்பயணமாக தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத்தினருடன் ஊட்டிக்கு வந்தார்.
கவர்னர் வருகை
தமிழகத்தின் புதிய கவர்னராக பொறுப்பேற்று உள்ள ஆர்.என்.ரவி 5 நாள் சுற்றுப்பயணமாக நேற்று நீலகிரி மாவட்டம் ஊட்டிக்கு நேற்று மாலை வந்தார். அவர் சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை விமான நிலையத்துக்கு மதியம் 2.25 மணியளவில் வந்தார்.
அங்கிருந்து கார் மூலம் 2.35 மணிக்கு ஊட்டிக்கு புறப்பட்டார். மேட்டுப்பாளையம், கோத்தகிரி வழியாக ஊட்டி தாவரவியல் பூங்கா மேல்பகுதியில் உள்ள ராஜ்பவனை மாலை 6.10 மணிக்கு வந்தடைந்தார்.
இதையொட்டி வழிநெடுகிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. கவர்னர் வருகையையொட்டி தாவரவியல் பூங்கா சாலையில் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒரு பகுதியில் கடைகளை அடைக்க அறிவுறுத்தப்பட்டது.
ஊட்டி ராஜ்பவனுக்கு வருகை தந்த தமிழக கவர்னர் ஆர்.என்.ரவியை நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத் வரவேற்றார்.
முன்னேற்பாடு பணிகள்
ஊட்டி ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி வருகிற 18-ந் தேதி வரை ஓய்வெடுக்கிறார். அவர், 19-ந் தேதி ஊட்டியில் இருந்து மதியம் 12.25 மணிக்கு சாலை மார்க்கமாக கோவை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து சென்னைக்கு புறப்படுகிறார்.
கவர்னருடன் அவரது மனைவி லட்சுமி ரவி மற்றும் 5 குடும்ப உறுப்பி னர்கள் வந்து உள்ளனர். ஊட்டியில் கவர்னர் ஆர்.என்.ரவி தனது குடும்பத் தினருடன் அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, பைக்காரா படகு இல்லம், சூட்டிங்மட்டம் போன்ற சுற்றுலா தலங்களை பார்வை யிட்டு ரசிக்க உள்ளார்.
இதைதொடர்ந்து சுற்றுலா தலங்களில் முன்னேற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. கவர்னர் வருகையை ஒட்டி ராஜ்பவன், தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ் உள்ளிட்ட பகுதிகளில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.