நிரம்பி வழியும் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள்

பண்டிகைகள் காரணமாக தொடர் விடுமுறை எதிரொலியின் காரணமாக திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் நிரம்பி வழிகின்றன.

Update: 2021-10-15 11:40 GMT
திருப்பூர்
பண்டிகைகள் காரணமாக தொடர் விடுமுறை எதிரொலியின் காரணமாக திருப்பூரில் இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் நிரம்பி வழிகின்றன. 
தொடர் விடுமுறை 
திருப்பூரில் வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் பலர் வேலை செய்து வருகிறார்கள். இவர்கள் வாடகைக்கு வீடுகள் எடுத்து திருப்பூரில் தங்கியிருக்கிறார்கள். இதுபோல் பனியன் நிறுவனங்களை சேர்ந்த தொழிலாளர்கள் பலரும் வேலை செய்து வருகிறார்கள். பண்டிகை காலங்கள் மற்றும் விசேஷ நாட்களில் மட்டும் சொந்த ஊர்களுக்கு செல்கிறார்கள். 
இந்த நிலையில் ஆயுதபூஜை மற்றும் விஜயதசமி, சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை என 4 நாட்கள் தொடர் விடுமுறை வந்துள்ளது. இந்த விடுமுறையின் காரணமாக பலரும் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர். இவ்வாறு சென்றவர்கள் தங்களது இருசக்கர வாகனங்களை திருப்பூர் ரெயில் நிலையம் மற்றும் மற்றும் புதிய பஸ் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இருசக்கர வாகன நிறுத்தும் இடங்களில் நிறுத்தி விட்டு சென்றுள்ளனர். 
நிரம்பி வழியும்...
பலரும் ஒரே நேரத்தில் சொந்த ஊர்களுக்கு சென்றதால் இருசக்கர வாகனங்கள் நிறுத்திமிடங்கள் நிரம்பி வழிகின்றன. நாளை விடுமுறை முடிந்த பின்னர் பலரும் நாளை காலை திருப்பூருக்கு பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் வந்து, தங்களை வாகனத்தை எடுத்து செல்வார்கள். 
திருப்பூரில் தொழிலாளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வாகன போக்குவரத்தும் மற்ற மாவட்டங்களை விட அதிகமாக இருக்கும். இதனால் இருசக்கர வாகன நிறுத்துமிடங்கள் இவ்வாறு நிரம்பி வழிவது குறிப்பிடத்தக்கது. 

மேலும் செய்திகள்