ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் பணியிடை நீக்கம்
ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாணியம்பாடி
ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
வாக்கு எண்ணும் மையம்
ஆலங்காயம் ஒன்றியத்தில் கடந்த 9-ந் தேதி நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப் பெட்டிகள் நேற்று முன்தினம் காலை வரையில் ஆலங்காயத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்திற்கு கொண்டு வரப்பட்டு அறையில் வைக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் ஓட்டு எண்ணிக்கை மையத்திற்குள் ஜோலார்பேட்டை தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. தேவராஜி மற்றும் அவரது ஆதரவாளர்கள் 2 கார்களில் உள்ளே நுழைந்ததை கண்டித்து, அ.தி.மு.க.வினர் மற்றும் இதர கட்சியினர் ஓட்டு எண்ணிக்கை மையம் அருகில் நேற்று முன்தினம் போராட்டம் நடத்தினர்.
பணியிடை நீக்கம்
இதையடுத்து மாவட்ட தேர்தல் பார்வையாளர் காமராஜ், மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான அமர்குஷ்வாஹா, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் ஆகியோர் ஆலங்காயம் ஓட்டு எண்ணும் மையத்திற்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த பதிவுகளை பார்வையிட்டனர்.
அதன்பின்னர், தேர்தல் விதிகளை மீறியதாக ஆலங்காயம் ஒன்றிய தேர்தல் நடத்தும் அலுவலர் சிவக்குமாரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவு பிறப்பித்தார்.