அய்யனாரப்பன் கோவிலில் சாமி சிலைகள் உடைப்பு
விழுப்புரம் அருகே அய்யனாரப்பன் கோவிலில் சாமி சிலைகளை உடைத்த மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.;
செஞ்சி,
விழுப்புரம் அருகே நரசிங்கனூரில் அய்யனாரப்பன் கோவில் உள்ளது. இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்குள் நள்ளிரவில் மர்மநபர்கள் புகுந்துள்ளனர்.
பின்னர் அவர்கள், கோவிலில் இருந்த சிமெண்டால் ஆன அய்யனாரப்பன் மற்றும் பூரணி ஆகிய சிலைகளை உடைத்து சேதப்படுத்தினர். பின்னர் அந்த சிலைகளை அருகில் உள்ள குளத்தில் வீசிவிட்டு சென்றனர்.
போலீசில் புகார்
இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், இந்து அறநிலையத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் பல்லவி நேரில் வந்து பார்வையிட்டார். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் கஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சாமி சிலைகளை உடைத்த மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.