மின்சாரம் தாக்கி மூதாட்டி பலி
கிரைண்டரில் மாவு அரைத்தபோது மின்சாரம் தாக்கி மூதாட்டி உயிரிழந்தார்.
கோட்டுச்சேரி, அக்.
கோட்டுச்சேரியை அடுத்த வரிச்சிக்குடி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். இவரது மனைவி அபிராமி (வயது 82). நேற்று முன்தினம் இவர், வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள், அபிராமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து கோட்டுச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.