திருத்தணி அருகே கொசஸ்தலை ஆற்றில் மணல் எடுக்க வந்த லாரிகள், பொக்லைன் எந்திரம் பொதுமக்கள் சிறைபிடிப்பு
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே இலுப்பூர் கிராம பகுதிக்கு செல்லும் கொசஸ்தலை ஆற்று படுகைகளில் இருந்து மணல் எடுக்க 2 லாரிகள், ஒரு பொக்லைன் நேற்று முன்தினம் இரவு வந்தன.
இதை அறிந்த அப்பகுதி மக்கள் அவற்றை சந்தேகத்தின் பேரில் சிறைபிடித்தனர். தகவல் கிடைத்ததும் அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற அதிகாரிகள் கிராம மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். சுமார் 4 மணி நேர பேச்சுவார்த்தைக்கு பின்பு இனிமேல் அந்தப் பகுதிக்கு மணல் எடுக்க லாரிகளும் பொக்லைன் எந்திரத்துடன் வர தடை விதிக்கப்படும் என்ற அதிகாரிகளின் உறுதியை ஏற்று கிராம மக்கள் தாங்கள் சிறைபிடித்த லாரிகள், பொக்லைன் எந்திரம் ஆகியவற்றை விடுவித்தனர்.