குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே குடும்பத் தகராறில் கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூரை அடுத்த வெள்ளவேடு அருகே உள்ள திருமழிசை மந்தவெளி தெருவை சேர்ந்தவர் ஜேம்ஸ் (வயது 42). இவர் கூலித் தொழிலாளி ஆவார்.
இந்தநிலையில் ஜேம்ஸ்சுக்கும் அவரது மனைவி பிரமிளா மேரிக்கும் இடையே குடும்பத் தகராறு காரணமாக அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில், நேற்று முன்தினம் ஜேம்ஸ் குடும்ப பிரச்சினை காரணமாக தன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் மின்விசிறியில் புடவையால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்தசம்பவம் குறித்து அவரது மனைவி பிரமிளா மேரி வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு வந்து, ஜேம்ஸ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து அவரது சாவு குறித்து விசாரித்து வருகின்றனர்.