திருப்பூர்
திருப்பூர் போயம்பாளையம் நஞ்சப்பாநகர் பகுதியை சேர்ந்தவர் பொன்ராஜ் வயது 41. தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் போயம்பாளையம் பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மற்றொரு மோட்டார் சைக்கிள், பொன்ராஜின் மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது.
இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். உடனே அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பொன்ராஜ் பலியானார். இந்த விபத்து குறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.