கணவர் செலுத்தியதாக புகார்

தி.மு.க. பெண் வேட்பாளரின் வாக்கை அவருடையகணவர் செலுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2021-10-11 12:19 GMT
திருப்பூர்
தி.மு.க. பெண் வேட்பாளரின் வாக்கை அவருடையகணவர் செலுத்தியதாக எழுந்த புகாரை தொடர்ந்து விசாரணை நடத்த கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
பெண் வேட்பாளர்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் வினீத் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் பா.ஜனதா திருப்பூர் தெற்கு மாவட்ட பொதுச்செயலாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நிர்வாகிகள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது
திருப்பூர் மாவட்ட ஊராட்சியின் 10வது வார்டு உறுப்பினர் பதவிக்கு இடைத்தேர்தல் கடந்த 9ந் தேதி நடைபெற்றது. 14 ஊராட்சியை சேர்ந்த வாக்காளர்கள் வாக்களித்தனர். இந்த தேர்தலில் தி.மு.க.சார்பில் கிருஷ்ணவேணி வரதராஜன், அ.தி.மு.க. சார்பில் லட்சுமி சோமசுந்தரமும் மற்றும் மற்ற கட்சி வேட்பாளர்கள் என 7 பேர் போட்டியிட்டனர்.
 இதில் தி.மு.க. வேட்பாளர் கிருஷ்ணவேணி வரதராஜனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு திருப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் அவர் வாக்களிக்க வரவில்லை. ஆனால் கிருஷ்ணவேணியின் கணவர், தனது மனைவியின் வாக்கை பாப்பினியில் உள்ள வரதப்பம்பாளையத்தில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தி உள்ளார் என்பது தெரியவருகிறது. இதற்கு அதிகாரிகள் உறுதுணையாக இருந்துள்ளனர். இதுகுறித்து விசாரித்து அதிகாரிகள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். தி.மு.க. சார்பில் போட்டியிட்ட கிருஷ்ணவேணியை தேர்தலில் இருந்து தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
விசாரணை நடத்த உத்தரவு 
இதுகுறித்து கலெக்டர் வினீத்திடம் கேட்டபோது, தி.மு.க. வேட்பாளரின் வாக்கை அவருடைய கணவர் பதிவு செய்துள்ளதாக புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் பிரிவினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.

மேலும் செய்திகள்