போதை சாக்லெட் விற்பனை செய்த 2 பேர் கைது
பெருமாநல்லூர் அருகே போதை சாக்லெட் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
பெருமாநல்லூர்
பெருமாநல்லூர் அருகே போதை சாக்லெட் விற்பனை செய்த 2பேரை போலீசார் கைது செய்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
கடையில் சோதனை
பெருமாநல்லூர் அருகே புதிய திருப்பூர் பகுதியில் உள்ள பீடா கடை ஒன்றில் போதை சாக்லெட் விற்பனை செய்யப்படுவதாக பெருமாநல்லூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது அந்த பீடா கடையில் போதை சாக்லேட் ஒன்று ரூ.20 முதல் ரூ.100 வரை விற்பனை செய்வதை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து பீடா கடை நடத்தி வந்த உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த திரிலோகே சோன்கர் வயது 27, கியாமுதீன் 30 ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் விசாரணை நடத்தியதில், வட மாநிலங்களில் இருந்து திருப்பூருக்கு வேலைக்கு வரும் தொழிலாளர்கள் மூலம் போதை சாக்லெட் வரவழைக்கப்பட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.
பறிமுதல்
இதனைத் தொடர்ந்து அவர்கள் தங்கியிருந்த வீட்டிலிருந்து விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மூன்று கிலோ அளவிலான போதை சாக்லெட்டுகளை பெருமாநல்லூர் போலீசார் பறிமுதல் செய்தனர்.
--------------