ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி
ராணுவ அதிகாரி வீட்டில் கொள்ளை முயற்சி
முக்கூடல்:
பாப்பாக்குடி அருகே கபாலிபாறை வடக்கு தெருவைச் சேர்ந்தவர் முத்துராஜ். ஓய்வுபெற்ற ராணுவ அதிகாரியான இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியூரில் உள்ள மகனின் வீட்டுக்கு சென்று விட்டு, நேற்று முன்தினம் இரவில் தனது வீட்டுக்கு திரும்பி வந்தார்.
இந்த நிலையில் நள்ளிரவில் முத்துராஜின் வீட்டில் திருடுவதற்காக கதவை மர்மநபர் உடைக்க முயன்றார். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் மர்மநபர் தப்பியோடி விட்டார். இதுகுறித்த புகாரின்பேரில், பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீட்டில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.