பாவூர்சத்திரத்தில் மாயமானதாக தேடப்பட்ட வாலிபர் கொன்று புதைப்பு
வாலிபர் கொன்று புதைப்பு
நெல்ைல:
பாவூர்சத்திரத்தில் மாயமானதாக தேடப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டு நெல்லையில் புதைக்கப்பட்டார். அவரது உடல் இன்று (திங்கட்கிழமை) தோண்டி எடுக்கப்படுகிறது.
பூக்கட்டும் தொழிலாளி
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் முருேகசன். பூ வியாபாரி. இவருடைய மகன் ஜெகதீஷ் (வயது 23). பூக்கட்டும் தொழிலாளியான இவர் கடந்த 5-ந்தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாயமான ஜெகதீசை மீட்கக் கோரி, நேற்று முன்தினம் அவருடைய உறவினர்கள், கிராம மக்கள் சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் திரண்டு சாலைமறியலுக்கு முயன்றனர். அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய பின்னர் கலைந்து சென்றனர்.
கொலை
இதையடுத்து தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணராஜ் உத்தரவின்பேரில், மாயமான ஜெகதீசை கண்டுபிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். ஜெகதீஷின் நண்பர்களிடமும் துருவி துருவி விசாரணை நடத்தினர். முதல்கட்ட விசாரணையில், ஜெகதீசை சிலர் கொலை செய்த அதிர்ச்சி தகவல் வெளியானது.
சமீபத்தில் சிவகாமிபுரத்தில் நடந்த கோவில் விழாவில் வெளியூர் நபர்களும் பங்கேற்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட வாக்குவாதம், கைகலப்பு தொடர்பாக ஜெகதீசுக்கும், சிலருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
மதுகுடிக்க அழைத்து...
இந்த நிலையில் ஜெகதீசை சிலர் மது குடிக்க அழைத்து சென்றுள்ளனர். பின்னர் அவரை கொலை செய்து, உடலை காரில் ஏற்றி சென்று, நெல்லை-நாகர்கோவில் ரோடு டக்கரம்மாள்புரம் பகுதியில் ஒதுக்குப்புறமான இடத்தில் புதைத்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து நெல்ைல மாநகர போலீஸ் கமிஷனர் செந்தாமரைக்கண்ணன் உத்தரவின்பேரில், சட்டம்-ஒழுங்கு துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமார், மேலப்பாைளயம் போலீசார் நேற்று இரவில் டக்கரம்மாள்புரம் பகுதியில் ெஜகதீஷ் உடல் புதைக்கப்பட்டதாக கூறப்படும் இடத்தை பார்வையிட்டனர். அங்கு சமீபத்தில் குழி ேதாண்டி இருப்பதற்காக அடையாளங்கள் இருந்தன.
இன்று, உடல் தோண்டி எடுப்பு
இன்று (திங்கட்கிழமை) ஜெகதீசின் உடலை தோண்டி எடுக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ேமலும் இதுெதாடர்பாக போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
பாவூர்சத்திரத்தில் மாயமானதாக தேடப்பட்ட வாலிபர் கொலை செய்யப்பட்டு நெல்லையில் புதைக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.