குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது

மேலூர் அருகே குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

Update: 2021-10-10 20:33 GMT
மேலூர்,

மேலூர் அருகே உள்ள கொட்டகுடியை சேர்ந்த மாயாண்டி என்பவரது மகன் பிரபா என்ற பிரபாகரன்.(வயது 24). இவர் பல்வேறு வழக்குகள் தொடர்பாக ஏற்கனவே கைதாகி தற்போது மதுரை சிறையில் உள்ளார். இவரை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். அந்த பரிந்துரையின்படி தற்போது சிறையில் உள்ள பிரபாகரனை குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய மாவட்ட கலெக்டர் அனிஷ்சேகர் உத்தரவிட்டார். மேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் அந்த உத்தரவை சிறையில் உள்ள பிரபாகரனிடம் சார்பு செய்துள்ளார்.

மேலும் செய்திகள்