தினத்தந்தி புகார் பெட்டி-ஓடையை தூர்வார வேண்டும்

தினத்தந்தி புகார் பெட்டி-ஓடையை தூர்வார வேண்டும்

Update: 2021-10-10 20:21 GMT
அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி அலுவலகத்தின் எதிரே உள்ள நடுச்சாலையில் மழைநீர் வடிகால் ஓடை பராமரிக்கப்படாததால் செடிகள் வளர்ந்து புதர் மண்டிக்கிடக்கிறது. இதனால், மழைநீர் சாலையில் தேங்கி கொசுக்கள் உற்பத்தியாகி நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மழைநீர் ஓடையை தூர்வாரி சீரமைக்க நடவடிக்ைக எடுக்க வேண்டும். 
                                         -ராஜா, அகஸ்தீஸ்வரம். 
விபத்து அபாயம்
நாகர்கோவில் ஊட்டுவாழ்மடம் பகுதியில் மாடன்தம்புரான் கோவில் அருகில் ஒரு மின்கம்பம் உள்ளது. இந்த மின் கம்பத்தில் பொருத்தப்பட்டுள்ள விளக்கின் சுவிச்சானது திறந்த நிலையில் குழந்தைகளுக்கு எட்டும் வகையில் தாழ்வான இடத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதியில் உள்ள சிறு குழந்தைகள் விபத்தில் சிக்க வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் சுவிச்சை உயரமான இடத்தில் பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                   -கரிகாலன், ஊட்டுவாழ்மடம். 
வடிகால் ஓடை தேவை
ஆலஞ்சியில் இருந்து மிடாலம் செல்லும் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. சாலையில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகமாக இருக்கும். இந்த சாலையில் ஆலஞ்சி கிறிஸ்தவ ஆலயம் பகுதியில் பெரிய பள்ளம் ஏற்பட்டள்ளது. சாலையில் வடிகால் ஓடை இல்லாததால் மழைநீர் பள்ளத்தில் தேங்கி நிற்கிறது. இதனால், பாதசாரிகளும், வாகன ஓட்டிகளும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிகாரிகள் சாலையை சீரமைத்து வடிகால் ஓடை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                         -சுனில்குமார், ஆலஞ்சி. 
சேதமடைந்த தடுப்பு சுவர்
ஈத்தாமொழி அடுத்த சுண்டப்பற்றிவிளையில் அரசு மேல்நிலைப் பள்ளியின் எதிரே புதுக்குடியிருப்புக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் பழமையான சிறிய பாலம் ஒன்று உள்ளது. இந்த பாலத்தின் இருபுறமும் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு சுவர் தரைமட்டத்தில் இருக்கிறது. மேலும், தடுப்பு சுவரும் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், வாகன ஓட்டிகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், வாகன ஓட்டிகள் நலன்கருதி பாலத்தின் தடுப்பு சுவரை இருபுறமும் சீரமைத்து உயரமாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
                                            -சிவா, ஈத்தாமொழி.
சாலை சீரமைக்கப்படுமா?
கொட்டாரம் அருகே சுயம்புலிங்கம் நகர் சாலை சேதமடைந்து குண்டும் குழியுமாக காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக பள்ளிக்கு செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலை சீரமைக்கப்படுமா?.
                                        -தேவி, சுயம்புலிங்கம்நகர்.
வாகன ஓட்டிகள் அவதி
நாகர்கோவில் மணிமேடை சந்திப்பில் இருந்து பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் மாநகராட்சி அலுவலகத்துக்கு செல்லும் திருப்பத்தில் மழைநீர் வடிகால் ஓடையின் மேல் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிமெண்டு சிலாப் சேதமடைந்து காணப்படுகிறது. இதனால், அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருவதுடன் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த பகுதியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.  
                                                 -சுரேஷ், தேரூர்

மேலும் செய்திகள்