தினத்தந்தி புகர் பெட்டி

தஞ்சை மாவட்டத்தில் உள்ள குறைகள் புகார் பெட்டியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-10 20:01 GMT
  அதிகாரிகள் கவனிப்பார்களா?
தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் உள்ள மங்களபுரம் பகுதியில் சுந்தரம் நகர், திருப்பதி நகர் உள்ளன. இந்த பகுதியில் உள்ள சாலையில் மழைநீர் தேங்கி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கின்றன. இதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுகின்றன. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. மேலும்  சாலைகள் சேதமடைந்து கிடப்பதால் மாணவ-மாணவிகள், முதியவர்கள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகிவருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட சேதமடைந்த சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.                                                -பிரபு, தஞ்சாவூர்.
 குண்டும், குழியுமான சாலை
தஞ்சை அடுத்த வாழமரக்கோட்டை பகுதியில் உள்ள சாலை குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.மேலும், சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்து கிடப்பதால் வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே, உயிர்பலி எதுவும் ஏற்படும் முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.                      -நவீன், தஞ்சாவூர்.
 சேறும், சகதியுமான சாலை
நாஞ்சிக்கோட்டை ஊராட்சி மாதாக்கோட்டையில் ராஜா நகர், வளனார் நகர் பகுதி உள்ளது. இந்த பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மேற்கண்ட பகுதிகளில் உள்ள சாலைகள் பராமரிப்பின்றி காணப்படுகிறன்றன.குறிப்பாக மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக மாறிவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ-மாணவிகள் என அனைத்து தரப்பினரும் பாதிப்புக்குள்ளாகின்றனர். மேலும், சேறும், சகதியுமான சாலையால் வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கிக்கொள்கின்றனர்.எனவே, அசம்பாவிதம் எதுவும் ஏற்படும் முன்பு சேறும், சகதியுமான சாலையை சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.
-பொதுமக்கள், மாதாக்கோட்டை.

மேலும் செய்திகள்