பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
திருத்தங்கலில் பெண்ணை தாக்கிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.;
சிவகாசி,
திருத்தங்கல் ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் கணேசன் மனைவி கமலா (வயது 39). இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில் வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் இவருக்கும், இவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் செல்வம் (22) என்பவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது செல்வம் வீட்டின் முன்பு இருந்த இரும்பு கம்பியை எடுத்து கமலாவை தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதில் ரத்தகாயம் அடைந்த அவர் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து கமலா திருத்தங்கல் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து செல்வத்தை கைது செய்தனர்.