கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 வது கட்டமாக 5 ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 வது கட்டமாக 5 ஊராட்சி ஒன்றியங்களில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 82 சதவீத வாக்குகள் பதிவானது
கள்ளக்குறிச்சி
950 வாக்குச்சாவடிகள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2-வது கட்டமாக கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், சங்கராபுரம், கல்வராயன்மலை மற்றும் சின்னசேலம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உள்ளாட்சி தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதற்காக 950 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டன.
வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் முடிவடைந்தது.
கள்ளக்குறிச்சி, சின்னசேலம்
இதில் கள்ளக்குறிச்சி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 12 லட்சத்து 46 ஆயிரத்து 4 வாக்காளர்களில் 50 ஆயிரத்து 327 ஆண் வாக்காளர்கள், 53 ஆயிரத்து 857 பெண் வாக்காளர்கள், 11 இதர வாக்காளர்கள் என மொத்தம் 1 லட்சத்து 41 ஆயிரத்து 95 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 83.62 சதவீதம் ஆகும்.
சின்னசேலம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1 லட்சத்து 10 ஆயிரத்து 614 வாக்காளர்களில் 45 ஆயிரத்து 284 ஆண் வாக்காளர்கள், 48 ஆயிரத்து 325 பெண் வாக்காளர்கள் என மொத்தம் 93 ஆயிரத்து 609 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 84.63 சதவீதம் ஆகும்.
சங்கராபுரம், தியாகதுருகம்
அதேபோல் சங்கராபுரம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 1 லட்சத்து 25 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 47 ஆயிரத்து 583 ஆண் வாக்காளர்கள், 52 ஆயிரத்து 114 பெண் வாக்காளர்கள், 4 இதர வாக்காளர்கள் என மொத்தம் 99 ஆயிரத்து 701 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 79.74 சதவீதம் ஆகும். தியாகதுருகம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 86 ஆயிரத்து 152 வாக்காளர்களில் 34 ஆயிரத்து 101 ஆண் வாக்காளர்கள், 36 ஆயிரத்து 459 பெண் வாக்காளர்கள், ஒரு இதர வாக்காளர் என மொத்தம் 70 ஆயிரத்து 561 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 81.90 சதவீதம் ஆகும்.
கல்வராயன்மலை
அதேபோல் கல்வராயன்மலை ஒன்றியத்தில் மொத்தமுள்ள 43 ஆயிரத்து 699 வாக்காளர்களில் 18 ஆயிரத்து 562 ஆண் வாக்காளர்கள், 18 ஆயிரத்து 161 பெண் வாக்காளர்கள், 2 இதர வாக்காளர்கள் என மொத்தம் 36 ஆயிரத்து 725 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 84.04 சதவீதம் ஆகும்.
ஆக 5 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 4 லட்சத்து 90 ஆயிரத்து 100 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 857 ஆண் வாக்காளர்கள், 2 லட்சத்து 8 ஆயிரத்து 916 பெண் வாக்காளர்கள், 18 இதர வாக்காளர்கள் என மொத்தம் 4 லட்சத்து 4 ஆயிரத்து 791 வாக்காளர்கள் வாக்களித்தனர். இது 82.59 சதவீதம் ஆகும்.