உழவு டிராக்டரை ரிமோட் மூலம் இயக்கும் புதிய கருவி

உழவு டிராக்டரை ரிமோட் மூலம் இயக்கும் புதிய கருவியை காரைக்கால் இளைஞர் கண்டுபிடித்துள்ளார்.

Update: 2021-10-10 16:51 GMT
காரைக்கால், அக்.
உலகம் முழுவதும் கொரோனா தொற்று பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வந்த காலத்தில், ஊரடங்கு காலத்தை பலர் பயனுள்ளதாக மாற்றினர். அந்த வகையில் காரைக்கால் மாவட்டம் நெடுங்காட்டை சேர்ந்த பட்டதாரி இளைஞர் அஷ்வின்ராம், உழவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் சாதனத்தை கண்டுபிடித்துள்ளார். 
பி.இ., ஆட்டோமொபைல் படித்துள்ள அஸ்வின்ராம், கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்தார். தனது அறிவை பயன்படுத்தி சில புதிய சாதனங்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். நீண்ட முயற்சிக்கு பின் உழவுக்கான டிராக்டரை ரிமோட் கண்ட்ரோல் மூலம் இயக்கும் கருவியை கண்டுபிடித்துள்ளார்.
அதன்படி டிராக்டரை ஆன் செய்து வயலில் இறக்கிவிட்டு விட்டு, 100 அடி தூரத்தில் நின்றுகொண்டு, ரிமோட் மூலமாக இயக்கலாம். டிராக்டர் சரியான பாதையில் செல்லாமல் வேறு பகுதிக்கு செல்லும் போது, தானாக எஞ்சின் ஆப் ஆகும் வகையில் அந்த சாதனம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கண்டுபிடிப்பு விவசாயிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மேலும் செய்திகள்