திருவண்ணாமலை அருகே; மழைநீர் தேங்கிய பகுதியில் நாற்று நடும் போராட்டம்

திருவண்ணாமலை அருகே மழைநீர் தேங்கிய பகுதியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2021-10-10 16:11 GMT
திருவண்ணாமலை

திருவண்ணாமலை அருகே மழைநீர் தேங்கிய பகுதியில் பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

 மழைநீர் 

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் சாலைகள் மழைநீர் தேங்கி சேறும், சகதியுமாக காணப்படுகின்றது. 

திருவண்ணாமலை அருகே உள்ள சொரகுளத்தூர் கிராமத்தில் பாட்டை தெருவில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையினால் தெரு முழுவதும் மழைநீர் தேங்கி குளம்போல் சூழ்ந்து உள்ளது. 

இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடமாட முடியாத அளவிற்கு சேறும், சகதியுமாக காணப்படுகிறது. எனினும் இந்த பாதையில் வேறு வழியின்றி நடந்து செல்வதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. 

மேலும் மழைநீர் தேக்கி இருப்பதால் கொசு தொல்லை அதிகமாக உள்ளதாக பொதுமக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். 

 நாற்று நடும் போராட்டம்

இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. 

இதனால் அந்த தெருவில் உள்ள இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் மழை நீர் தேங்கி உள்ள பகுதிகளில் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்