பெண் பலி

வேடசந்தூர் அருகே மினி லாரி, மொபட் மீது மோதியதில் பெண் ஒருவர் பலியாகினார்.

Update: 2021-10-10 15:34 GMT
வேடசந்தூர்: 

வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டியை சேர்ந்த முருகேசன் மனைவி முருகேஸ்வரி (வயது 30). இவரும், உறவினர் ராஜராஜேஸ்வரி (25) ஆகியோர் எரியோட்டில் உள்ள உறவினரை பார்ப்பதற்காக நேற்று மதியம் ஒரு மொபட்டில் சென்றனர். அப்போது வேடசந்தூர்-எரியோடு சாலையில் தண்ணீர்பந்தம்பட்டி அருகே பின்னால் வந்த ஒரு மினி லாரி, அவர்கள் மொபட் மீது பயங்கரமாக மோதியது.

இதில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் முருகேஸ்வரி பரிதாபமாக இறந்தார். திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் ராஜராஜேஸ்வரி சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து எரியோடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சத்தியபிரபா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்