கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

கடையின் பூட்டை உடைத்து பணம் திருட்டு

Update: 2021-10-10 14:41 GMT
பொள்ளாச்சி

பொள்ளாச்சியை அடுத்த டி.கோட்டாம்பட்டியை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது, 52). இவர், பொள்ளாச்சி - கோவை ரோட்டில் மருந்து கடை நடத்தி வருகிறார். இவர், நேற்று முன்தினம் இரவு வியாபாரம் முடிந்து கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். நேற்று காலை அவருடைய கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. 

இதனால் அதிர்ச்சி அடைந்த காவலாளி, ராஜகோபாலுக்கு உடனடியாக தகவல் தெரித்தார். உடனே அவர் கடைக்கு சென்று பார்த்த போது கடையில் இருந்த ரூ.35 ஆயிரம் திருடப்பட்டு இருப்பது தெரிய வந்தது. 

இது குறித்த புகாரின் பேரில் மகாலிங்கபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்