முத்தையாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

முத்தையாபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்;

Update: 2021-10-10 14:23 GMT
ஸ்பிக் நகர:
உத்திரப்பிரதேச மாநிலத்தில்  3 வேளாண் சட்டத்திற்கு எதிராக போராடிய விவசாயிகளை கார் ஏற்றி படுகொலை செய்த வழக்கில், மத்திய இணை அமைச்சரின் மகன் உள்பட அனைவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி அருகே உள்ள முத்தையாபுரம் பஜாரில் நேற்று மாவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர்.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மத்திய மாவட்ட செயலாளர் அகமது இக்பால் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் ஸ்பிக் நகர் பகுதி நிர்வாகிகள் ராஜேஷ், ஜேசுராஜ், சூரி, அந்தோணி, ரமேஷ், சந்தனகுமார், அய்யங்கனி, ராஜா மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஞானதுரை தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட செயலாளர் மாரிச்செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்