தமிழக கோவில்களில் உள்ள நகைகள் குறித்து அரசுவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தல்

தமிழக கோவில்களில் உள்ள நகைகள் குறித்து அரசுவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது

Update: 2021-10-10 14:19 GMT
கோவில்பட்டி:
தமிழக கோவில்களில் உள்ள நகைகள் குறித்து அரசுவெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
இந்துமுன்னணி  கூட்டம்
இந்து முன்னணியின் நெல்லை கோட்ட பொதுக்குழு கூட்டம் கோவில்பட்டி மந்தித்தோப்பு ரோட்டிலுள்ள தனியார் மண்டபத்தில் நடந்தது. நிகழ்ச்சிக்கு கோட்டத்தலைவர் தங்க மனோகர் தலைமை தாங்கினார்.  கோட்ட செயலாளர் பெ.சக்திவேலன், நகர தலைவர் எம்.ஸ்ரீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தூத்துக்குடி வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளர்களாக மாநில பொதுச்செயலாளர்கள் முருகானந்தம்,அரசுராஜா, மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில இணை அமைப்பாளர் கே.கே.பொன்னையா, மாநில செயலாளர் கா.குற்றலநாதன், கம்மவார் சங்க தலைவர் வெங்கடேஷ் சென்னகேசவன் ஆகியோர் கலந்து கொண்டு குத்துவிளக்கேற்றி பொதுக்குழு கூட்டத்தை தொடங்கி வைத்தனர்.
வெள்ளை அறிக்கை
கூட்டத்தில், கோவில்களில் எவ்வளவு தங்கம், வெள்ளி, விலை உயர்ந்த கற்கள் உள்ளன என்பது குறித்து இந்து சமய அறநிலையத்துறை வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பக்தர்கள் காணிக்கையாக அளித்த தங்க நகைகளை உருக்காமல் அப்படியே பாதுகாக்கலாம். எனவே, கோவிலில் தங்கத்தை உருக்கும், ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டத்தை தமிழக அரசு கைவிட வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந்த நாளான நவ 1-ந் தேதி அன்று, இதற்காக போராடிய தாணுலிங்க நாடாருக்கு அரசு சார்பில் விழா எடுக்க வேண்டும்.
கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு கலவரத்தில் காணாமல் போன 14 இந்துக்களையும் இறந்தவர்களாக அறிவித்து, அவர்கள் குடும்பத்துக்கு உரிய நிவாரணம், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
கோவில்களை இடிக்கும்...
நெல்லை மாவட்டம் பழைய பேட்டையில் வசிக்கும் இந்துக்களின் அடிப்படை உரிமைகளை பறிக்கும் பத்திர பதிவுத்துறை மற்றும் மின்வாரிய துறையின் செயல் பாடுகளையும், தூத்துக்குடியில் மாநகராட்சிபணிகளை காரணம் காண்பித்து இந்து கோவில்களையும், வழிபாட்டு தலங்களையும் இடிக்கப்பட்டு வருவதை கண்டித்தும் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நகர செயலாளர் எஸ். வெங்கடேசன் நன்றி கூறினார்.
கூட்டத்தில், நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த ஒன்றிய, நகர, மாவட்ட இந்து முன்னணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்