ஓடும் பஸ்சில் பணம் திருட முயன்ற பெண் கைது
ஓடும் பஸ்சில் பணம் திருட முயன்ற பெண் கைது
கோவை
தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் (நவம்பர்) 4-ந் தேதி கொண்டா டப்படுகிறது. இதையொட்டி கூட்ட நெரிசலை பயன்படுத்தி திருட்டு நடப்பதை தடுக்க சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் தனிப் படை அமைக்கப்பட்டு உள்ளது. நேற்று தனிப்படை போலீசார் பூ மார்க்கெட் பஸ் நிறுத்தம் அருகே அரசு பஸ்சில் மாறுவேடத்தில் ஏறி கண்காணிப்பில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த பஸ்சில் நின்று கொண்டு பயணித்த இளம்பெண் ஒருவரின் கைப்பையின் ஜிப்பை திறந்து பெண் ஒருவர் பணத்தை திருட முயன்றார். இதை அறிந்த அந்த இளம்பெண் கூச்சலிட்டார். உடனே பணத்தை திருட முயன்ற பெண் பஸ்சில் இருந்து குதித்து தப்பி ஓட முயன்றார். உடனே பஸ்சில் இருந்த தனிப்படை போலீசார் விரைந்து செயல்பட்டு அந்த பெண்ணை மடக்கி பிடித்தனர்.
விசாரணையில், அவர் நீலகிரி மாவட்டம் குன்னூர் சேர்ந்த முத்துமாரி (வயது 26) என்பதும், கூட்டம் அதிகமாக இருக்கும் பஸ்சில் சென்று பணம் திருடியதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் முத்து மாரியை கைது செய்தனர்.