தூத்துக்குடியில் சூதாடிய 6 பேர் கைது

தூத்துக்குடியில் சூதாடிய 6 பேரை போலீசார்கைது செய்தனர்;

Update: 2021-10-10 11:30 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, துப்பாஸ்பட்டிகுளம் பகுதியில் தாளமுத்து நகர் துரை சிங் நகரைச் சேர்ந்த ஆத்திலிங்கம் (வயது 40), ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த வண்ண முத்துராஜா (30), தாளமுத்துநகர் சேசு நகரைச் சேர்ந்த முனியசாமி (39), டி.சவேரியார்புரத்தைச் சேர்ந்த உதயகுமார் (42), தூத்துக்குடி சமீர் வியாஸ் நகரை சேர்ந்த பலவேசம் (62), சங்கரபேரியைச் சேர்ந்த ராஜேந்திரன் (53) ஆகிய 6 பேரும் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாடிக் கொண்டு இருந்தார்களாம். உடனடியாக போலீசார் 6 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.68 ஆயிரம் பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்