பாவூர்சத்திரம் அருகே, மாயமான வாலிபரை மீட்கக்கோரி சாலை மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

சாலை மறியலுக்கு முயன்ற கிராம மக்கள்

Update: 2021-10-09 22:37 GMT
பாவூர்சத்திரம்:
பாவூர்சத்திரம் அருகே, மாயமான வாலிபரை மீட்கக்கோரி, கிராம மக்கள் சாலைமறியலுக்கு முயன்றனர்.
மாயமான வாலிபர்
தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அருகே சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் முருகேசன். பூ வியாபாரி. இவருடயை மகன் ஜெகதீஷ் (வயது 23). பூக்கட்டும் தொழிலாளியான இவர் கடந்த 5-ந்ேததி வீட்டில் இருந்து வெளியே சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு திரும்பி வராமல் மாயமானார்.
இதுகுறித்த புகாரின்பேரில், பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாலைமறியலுக்கு முயற்சி
இந்தநிலையில் மாயமான ஜெகதீஷை உடனே மீட்க வலியுறுத்தி, நேற்று மதியம் அவருடைய உறவினர்கள், கிராம மக்கள் சிவகாமிபுரம் விலக்கு பகுதியில் திரண்டு நெல்லை-தென்காசி சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
இதுபற்றி தகவல் அறிந்ததும் ஆலங்குளம் துணை போலீஸ் சூப்பிரண்டு பொன்னிவளவன், ஊத்துமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் விரைந்து சென்று, சாலைமறியலுக்கு முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாயமான ஜெகதீஷை உடனே மீட்க நடவடிக்கை மேற்கொள்வதாக போலீசார் தெரிவித்தனர்.
இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர். பின்னர் அவர்கள், தென்காசி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு சென்று மனு வழங்கினர்.

மேலும் செய்திகள்