சேரன்மாதேவி அருகே குழிக்குள் இறங்கி விவசாயிகள் நூதன போராட்டம்

குழிக்குள் இறங்கி விவசாயிகள் நூதன போராட்டம்

Update: 2021-10-09 22:23 GMT
சேரன்மாதேவி:
நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி அருகே பிராஞ்சேரியை அடுத்த சுப்பிரமணியபுரத்தில் நேற்று விவசாயிகள் குழிக்குள் இறங்கி நின்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் செல்வகுமார், நகர செயலாளர்கள் பத்தமடை சுப்பிரமணியன், கோபாலசமுத்திரம் மாரியப்பன், பா.ஜ.க. ஒன்றிய பொதுச்செயலாளர் ராஜவேலு, ஒன்றிய விவசாய அணி தலைவர் கந்தசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறுகையில், ‘சுப்பிரமணியபுரத்தில் திருச்செந்தூர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் குத்தகை முறையில் விவசாயம் செய்து வருகிறோம். போதிய விளைச்சல் இல்லாததாலும், கொரோனா காலத்திலும் சில விவசாயிகள் குத்தகை பாக்கி வைத்துள்ளனர். இந்த நிலையில் குத்தகை பாக்கியை முழுமையாக தருமாறு கோவில் நிர்வாக அதிகாரிகள் வலியுறுத்துகின்றனர். எனவே பழைய குத்தகை பாக்கியை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்று தெரிவித்தனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மேலச்செவல் வருவாய் ஆய்வாளர் சங்கர மகாலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு விவசாயிகள் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்