முக்கூடலில் கஞ்சா விற்ற ரவுடி கைது

கஞ்சா விற்ற ரவுடி கைது

Update: 2021-10-09 22:02 GMT
முக்கூடல்:
முக்கூடல் அருகே வடக்கு அரியநாயகிபுரத்தைச் சேர்ந்தவர் சீதாராமன் மகன் கணேசன் என்ற கட்ட கணேசன் (வயது 27). இவர் முக்கூடலில் கஞ்சா விற்றபோது, அங்கு ரோந்து சென்ற முக்கூடல் போலீசார், கணேசனை கைது செய்தனர். அவரிடம் இருந்த அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கைதான கணேசன் மீது பல்வேறு வழக்குகள் உள்ளதாகவும், அவரது பெயர் ரவுடி பட்டியலில் இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்