காரைக்குடி
காரைக்குடி சோமநாதபுரம் போலீஸ் சரகம் சங்கராபுரத்தை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன்(வயது 78). இவரது மனைவி ராமாயி. இவர்கள் இருவரும் மதியம் 3 மணியளவில் வீட்டை பூட்டி விட்டு சாவியை வாசலில் உள்ள அம்மிக்கல்லின் கீழே வைத்து விட்டு அருகில் இருந்த தோட்டத்திற்கு சென்றனர். மீண்டும் மாலை 6 மணியளவில் வீட்டிற்கு வந்தபோது அங்கு ஒரு பெட்டியில் வைக்திருந்த ரூ.1 லட்சம், 5½ பவுன் நகைகளை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் குற்றபிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் பக்கத்து வீட்டை சேர்ந்த கண்ணகி(35) என்பவர் பூட்டியிருந்த வீட்டின் கதவை திறந்து நகை, பணத்தை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.