கோவில் நடைகள் அடைக்கப்பட்டதால் சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதி

சாமி தரிசனம் செய்ய முடியாமல் பக்தர்கள் அவதியடைந்தனர்.

Update: 2021-10-09 18:53 GMT
ஆவுடையார்கோவில்:
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழ்நாட்டில் உள்ள பெரிய கோவில்களில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. இதைதொடர்ந்து ஆவுடையார்கோவில் ஆத்மநாத சுவாமி கோவில், குறிச்சிகுளம் முத்துமாரியம்மன் கோவில்களின் நடைகள் அடைக்கப்பட்டிருந்தன. ஆவுடையார்கோவில் ஆத்மநாதசுவாமி கோவிலும் அடைக்கபட்டிருந்தாலும் நித்திய பூஜைகள் நடைபெற்றது. பக்தர்களை அனுமதிக்கப்படாததால் அவதியடைந்தனர். இதனால் பக்தர்கள் கோவில் வாசலில் நின்று சாமி தரிசனம் செய்து சென்றனர். 

மேலும் செய்திகள்