ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் 75.30 சதவீதம் வாக்குப்பதிவு

உள்ளாட்சி தேர்தலில் 75.30 சதவீதம் வாக்குப்பதிவு

Update: 2021-10-09 18:25 GMT
ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாவது கட்டமாக அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர் ஆகிய 4 ஒன்றியங்களில்‌ நடந்தது. அரக்கோணம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள ஒரு லட்சத்து 18 ஆயிரத்து 935 வாக்குகளில் 84 ஆயிரத்து 316 வாக்குகள் பதிவாகியிருந்தது. இது 70.89 சதவீதமாகும். நெமிலி ஒன்றியத்தில் மொத்தமுள்ள 99 ஆயிரத்து 815 வாக்குகளில் 80 ஆயிரத்து 758 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 80.91 சதவீதமாகும். 

காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 51 ஆயிரத்து 621 வாக்குகளில் 41 ஆயிரத்து 21 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 79.47 சதவீதமாகும். சோளிங்கர் ஒன்றியத்தில் மொத்தமுள்ள 98 ஆயிரத்து 7 வாக்குகளில் 71 ஆயிரத்து 284 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது 72.73 சதவீதமாகும். 4 ஒன்றியங்களில் மொத்தமுள்ள 3 லட்சத்து 68 ஆயிரத்து 378 வாக்குகளில் 2 லட்சத்து 77 ஆயிரத்து 379 வாக்குகள் பதிவாகி இருந்தது. இது ‌75.30 ஆகும்.

மேலும் செய்திகள்