அன்புமணி ராமதாஸ் எம்.பி. பிறந்தநாள் விழா

திருப்பூரில் பாம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்பி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது.;

Update: 2021-10-09 18:19 GMT
திருப்பூர்
திருப்பூரில் பா.ம.க. சார்பில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவில் அன்னதானம் வழங்கப்பட்டது. 
 பிறந்தநாள் விழா
பா.ம.க. இளைஞரணி தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி., பிறந்தநாள் விழா திருப்பூரில் நேற்று கொண்டாடப்பட்டது. விழாவில் மாநில துணை பொதுச்செயலாளர் மு.ரமேஷ் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். பூலுவப்பட்டி பிரிவு அம்மன் நகரில் ரத்ததான முகாம் நடைபெற்றது. மாநில இளைஞரணி துணை செயலாளர் கவின் ஜிம் ஜெயமுருகன் தலைமை தாங்கினார்.
இதில் 25 பெண்கள் உள்பட 200-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். முகாமில் வடக்கு மாவட்ட செயலாளர் ஜெய்சங்கர், மாநில இளைஞர் அணி துணைத்தலைவர் ஏழுமலை, துணை அமைப்பு செயலாளர் பனங்காடு ராஜேந்திரன், வடக்கு மாவட்ட தலைவர் வெங்கடேசன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
 வீரபாண்டி பிரிவு பகுதியில் கொடியேற்று விழா மற்றும் அன்னதானம் 200-க்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டது. தெற்கு மாவட்ட செயலாளர் ஆனந்தன் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், மாவட்ட துணை செயலாளர் சிவமணி, வீரபாண்டி பிரிவு செயலாளர் பிரகாஷ், நல்லூர் நகர பகுதி செயலாளர் சிவா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
டி.கே.டி.மில் பகுதியில் பா.ம.க. கொடியேற்றி வைத்து  இனிப்பு வழங்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு தெற்கு மாவட்ட தலைவர் மணிக்கண்ணன் தலைமை தாங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பன்னீர், மாவட்ட பொறுப்பாளர்கள் தண்டபாணி, வேல், துணை செயலாளர் வெற்றிச்செல்வன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
அன்னதானம்
 செங்கப்பள்ளியில் ஆதரவற்றவர்களுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி மாநில செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ் தலைமையில் நடைபெற்றது. இதில் தெற்கு மாவட்ட துணை செயலாளர் கலைச்செல்வன், மாவட்ட பொறுப்பாளர் முரளி, வடக்கு மாவட்ட இளைஞரணி செயலாளர் பிரதீப் சக்ரவர்த்தி, பாட்டாளி தொழிற்சங்க துணை செயலாளர் ஜெயபிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
திருப்பூர் வடக்கு ஒன்றியம் புதிய திருப்பூர் நேதாஜி அப்பேரல் பார்க் பகுதியில் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பாக விழா நடைபெற்றது. இதில் பாட்டாளி தொழிற்சங்க தலைவர் மயில்சாமி, செயலாளர் வேல்முருகன் ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வன்னியர் சங்க மாநில துணைத்தலைவர் மாஸ் முருகன், மாநகர செயலாளர் தயாளன், தலைவர் சரத்குமார், 1-வது மண்டல தலைவர் பூபதி உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்