கடலில் தவறி விழுந்து காவலாளி பலி

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து காவலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2021-10-09 17:51 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி மீன்பிடி துறைமுகத்தில் உள்ள விசைப்படகில், சிலுவைப்பட்டி சூசையப்பர் கெபி தெருவை சேர்ந்த மைக்கேல் (45) இரவுநேர காவலாளியாக இருந்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணியில் இருந்த மைக்கேல் எதிர்பாராதவிதமாக கடலில் தவறி விழுந்தார். இதில் அவர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தூத்துக்குடி தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மேலும் செய்திகள்