தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 5 பவுன் நகை திருட்டு

Update: 2021-10-09 16:16 GMT
சரவணம்பட்டி

கோவை சரவணம்பட்டி அம்மன் நகரில் வசித்து வருபவர் முத்துசர வணன் (வயது39). தனியார் நிறுவன ஊழியர். 

சம்பவத்தன்று இவர், நெல்லை மாவட்டம் சீவலப்பேரியில் உள்ள குலதெய்வ கோவில் திருவிழாவுக்கு சென்றார்.

 இந்நிலையில், நேற்று அவருடைய வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருப்பதாக பக்கத்து வீட்டை சேர்ந்தவர் தகவல் தெரிவித்தார். முத்து சரவணன் சரவணம்பட்டி வீட்டிற்கு வந்து பார்த்த போது

 பீரோவில் இருந்த 5½ பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. 

மேலும் செய்திகள்