உரம் விற்பனை செய்ய 6 கடைகளுக்கு தடை

உரம் விற்பனை செய்ய 6 கடைகளுக்கு தடை

Update: 2021-10-09 16:02 GMT
கோவை

சென்னை வேளாண்மை இயக்குனரின் உத்தரவின்பேரில் கோவை மாவட்டத்தில் செயல்படும் அனைத்து உர விற்பனை நிலையங்களில் வேளாண்மைத்துறை அதிகாரிகள் கொண்ட சிறப்புக்குழுவினர் திடீர் சோதனை நடத்தினர்.

அப்போது, கோவை மாவட்டத்தில் உள்ள உரக்கடைகளில் அரசு நிர்ணயித்த விலையில் மானிய விலை உரங்கள் விற்பனை செய்யப்படு கிறதா? உரக்கட்டுப்பாடு சட்டப்படி பதிவேடுகள் பராமரிக்கப்படுகி றதா? 

உரங்களின் இருப்பு மற்றும் விலை விவர பலகை வைக்கப்பட்டு உள்ளதா? விவசாயிகளின் ஆதார் எண்ணை கொண்டு விற்பனை முனைய கருவி மூலம் மானிய விலை உரங்கள் விற்பனை செய்யப்படு கிறதா? என்று அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

வேளாண்மை உதவி இயக்குனர், வேளாண்மை அலுவலர்கள் அடங் கிய 12 குழுக்கள் நடத்திய சோதனையில் உரக்கட்டுப்பாடு சட்டத்தின் படி 6 உரக்கடைகள் செயல்படாதது தெரிய வந்தது. 

எனவே சட்டவிதிகளை மீறிய அந்த 6 உரக்கடைகளும் உரங்களை விற்பனை தடை விதித்து உத்தரவிட்டு அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

இந்த தகவலை வேளாண்மை இணை இயக்குனர் சித்ராதேவி தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்